திருப்பூர் தெற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏபிஜே அப்துல் கலாம் ஐயாவின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தின் அறிவியல் அடையாளம் உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சியாளராக விளங்கிய ஏபிஜே அப்துல் கலாம் அய்யா 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஹில்லாக்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் உரை ஆற்றிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் உயிர் பிரிந்தது,
இந்த சோக நிகழ்ச்சி உலகெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உலகெங்கும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அய்யா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை ஒட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருப்பூரில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அப்துல் கலாம் அய்யாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்