நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூடுதல் அலுவலகத்தின் முன்பு ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்,மாநகராட்சி நகராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்குவது போல் ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி நல கூட்டமைப்பின் தலைவர் அஜித் குமார் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது