குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இரவு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாணவர்களுக்கு காலை 8.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
எனவே காலை நடக்கும் சிறப்பு வகுப்பை ரத்து செய்ய வேண்டும், வாரத்தேர்வை அந்தந்த ஆசிரியர்களின் தயாரிப்பில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும், நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவலுக்கு உட்படுத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணி ஏற்பினை உறுதி செய்த பின்னரே பணி விடுவிப்பு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.