தேனி பழைய பேருந்து நிலையத்தில் பலமாதங்களாக நிழற்குடை இல்லாமல் இருப்பதை தேனி மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியப்போக்குடன் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தற்போது தேனியில் மழைபெய்து கொண்டிருக்கும் சூழலில் பயணிகள் பேருந்திற்காக நிழற்குடை இன்றி மழையில் நனைந்தபடி காத்துகொண்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து யார் நடவடிக்கை எடுப்பார்? எப்போது பழைய பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமையும் என்று தேனி நகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பொறுத்திருந்து பாப்போம்.