உத்தமபாளையம் பேரூராட்சியின் சாதனை!பொதுமக்கள் வேதனை!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆர்.சி.மேலக்கிணற்று தெருவில் அமைந்துள்ள சத்துணவு அருகில் உள்ள சாக்கடை பாலத்தில் குப்பைக்கழிவுகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் நோய்த்தொற்றின் பிடியில் இப்பகுதி மக்கள் உள்ளனர்
.இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதால் தினமும் நோய்த்தொற்று அச்சத்துடன் இப்பகுதி மக்கள் உள்ளனர்.பலமுறை இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அலட்சியப்போக்குடன் கண்டும், காணாமலும் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் சாதனை செய்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக இப்பகுதியில் சத்துணவு கூடத்திற்கு வரும் சிறுவர், சிறுமியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சஉணர்வுடன் பெற்றோர்கள் சிறுவர், சிறுமியர்களை சத்துணவு கூடத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.மேலும், இப்பகுதிகளுக்கு தூய்மை பணியாளர்கள் யாரும் வருவதில்லை என்றும், பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டால் ஆள் அனுப்புவதாகவும் கூறும் செயல் தொடர் கதையாக நடக்கிறது.
ஆனால்இதுவரை தூய்மை பணியாளர்கள் யாரும் வருவதில்லை என இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இப்பகுதியில் கவுன்சிலர்கள் பல மாறினாலும் இங்குள்ள காட்சிகள் மாறாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரிடையாக செல்லாத காரணத்தால் பொதுமக்கள் சாக்கடை பாலத்தில் கொட்டும் அவல நிலை உண்டாகியுள்ளது. குப்பைகளை பல வருடங்களாக அல்லாமல் இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வரும் உத்தமபாளையம் பேரூராட்சியின் மீது ஆர்.சி.மேலக்கிணற்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
சத்துணவு கூடத்திற்கு வரும் சிறுவர், சிறுமியர் மற்றும் இப்பகுதியில் உள்ள பாமர, ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர் நேரடி பார்வையில் சாக்கடை குப்பைக் கழிவுகளை அகற்றியும் ,மேலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாதவாறு விழிப்புணர்வு பதாகை வைத்தும் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.