தற்போது தேனி மாவட்டத்தில் மழை பெய்துகொண்டிருக்கும் சூழலில் தேனி அல்லிநகரில் உள்ள புல்லுக்கட்டு தெரு செல்லும் வழியில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
அல்லிநகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சரிசெய்யப்படாமல் உள்ளதை பலமுறை அல்லிநகரம் பொதுமக்கள் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும்,மழைக் காலங்களில் பள்ளி வாகனங்கள் இப்பகுதியில் செல்வதற்கு சிரமம் அடைகின்றனர்.பொதுமக்கள் நலனை கருதி தேனி மாவட்ட நிர்வாகம் அல்லிநகரம் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.