தேனி மாவட்டம் கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்ற ஊர் உள்ளது .இந்த ஊரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் சென்றால் மேகமலை என்ற வாச ஸ்தலம் உள்ளது இந்த ஊரை அடுத்து மணலாறு வரை சாலை போக்குவரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இரவங்கலார் வரையிலும் சாலை போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆனால் மணலாறு மட்டுமே தார்சாலை போடப்பட்டுள்ளது .அதற்கு அடுத்து தார்சாலை போடாத காரணமாக இரவில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வரமுடியவில்லை, இதனால் உயிர் இழப்பு ஏற்படும் சூழல் உருவாவதாகவும் இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்