கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட வழுக்கம்பாறை அருகே அரசு புறம் போக்கு நிலத்தில் போடப்பட்டு இருந்த 21 குடிசை வீடுகளையும் அதில் குடியிருந்தவர்களையும் போலிஸார் பாதுகாப்புடன் வருவாய் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். .
எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் குடிசைகளை அகற்றியதாக அப்பகுதி மக்கள் புகார் செய்த நிலையில் . அருகில் இருந்த வீட்டிற்கு சென்ற இரண்டு போலிஸாரை வீட்டில் வைத்து பூட்டி சிறைப்பிடித்தனர். இதனை அடுத்து சிறப்பு காவல்படையினர் வந்து சிறைப்பிடிக்கப்பட்ட போலிஸாரை மீட்டார்கள்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.