தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் 1வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் சாக்கடை கழிவுநீரானது சாலையில் ஓடியது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து இப்பகுதி மக்கள் சாக்கடை அமைத்து தரும்படி உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை பலமுறை விடுத்தனர்.
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாக்கடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருப்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.