தென்னக ரயில்வே சார்பில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்போருக்கு வசதியாக விலை குறைந்த உணவு விற்பனை கவுண்டர்கள் திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்படாத மற்றும் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்கின்ற பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் உணவு வழங்க சிறப்பு கவுண்டர்கள் திருவனந்தபுரம், நாகர்கோவில் ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கொல்லம் ரயில்வே ஸ்டேஷனிலும் பரிசோதனை அடிப்படையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
ஐஆர்சிடிசியின் ரிபிரஷ்மென்ட் ரூம், ஜன்ஆகாார் ஆகிய இடங்களில் இருந்து கவுண்டர்களில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ரயிலின் இரண்டு முனைகளிலும் பொதுப் பெட்டிகள் உள்ளன. அதனால் இந்த பெட்டிகள் நிற்கின்ற இடத்தை மையமாக வைத்து கவுண்டர்கள் செயல்படும்.6 மாத காலத்தில் பரிசோதனை அடிப்படையில் இது செயல்படும். திட்டம் செயல்படுவது வெற்றிகரமாக நடைபெற்றால் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். திட்டத்தின் அடிப்படையில் 20 ரூபாய்க்கு 7 பூரி உருளைக்கிழங்குகறி, ஊறுகாய் ஆகியவையும் 50 ரூபாய்க்கு தென்னிந்திய சாப்பாடு அல்லது மசால் தோசை உள்ளிட்ட உணவுகள் இங்கே வழங்கப்படும்.
மேலும் தெற்கு ரயில்வேயில் மயிலாடுதுறை, விருதுநகர், மங்களூரு, சேலம், ஈரோடு என்று மொத்தம் 7 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.