வின்னைத் தொடும் தக்காளி விலை! தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி! தக்காளி விலை கடுமையாக விலை உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது, இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப அவர்கள் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்து துவக்கி வைத்தார்,
இதன் தொடர்ச்சியாக ரேசன் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்கப்பட்டது பொதுமக்கள் வரிசையில் நின்று தக்காளியை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்