தேனி மாவட்டம் அல்லிநகரம் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் ஜெ.ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு வனத்துறையினருக்கு தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தம்மை காத்துக்கொள்வது குறித்தும், காட்டுத்தீ ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்,காயம் அடைந்தவர்களை தூக்கி செல்வது குறித்தும் போலி ஒத்திகை பயிற்சி நடத்தினர்.சிறப்பாக செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினரை, வனத்துறையினர் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.