நகராட்சியில் 26வது வார்டில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் பல மாதங்களுக்கு முன்பாக சாக்கடை அடைத்துவிட்டதால் அருகில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்துவிட்டதை அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும், கோரிக்கை மனுக்கள் பல கொடுத்தும் இன்றுவரை கம்பம் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பம் நகர் மக்கள் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.