தமிழ்நாடு முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூபாய் 1.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் சுவாமி தோப்பு செட்டிவிளை கரும்பட்டூர் கீழ மணக்குடி கோவளம் ஆரோக்கியபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.
இதில் முதல் கட்டமாக 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கோவளம் ஆரோக்கியபுரம் சாலைகள் சீரமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் முன்னிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
உடன் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அகஸ்தீஸ்வரம் யூனியன் கவுன்சிலர் பிரேமலதா திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைபாரதி ஆர் எஸ் பார்த்தசாரதி ஒன்றிய செயலாளர் பாபு மதியழகன் இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் துணை அமைப்பாளர் பொன் ஜான்சன் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி பேரூர் செயலாளர்கள்இளங்கோ சுதாகர் காமராஜ் வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜன் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜானி லட்சுமிபுரம் ஐயப்பன் நிஜார் அன்பழகன் ஆல்பிரட் பண்ணையார் தொமுச செல்வம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .