தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 33 வது ஆண்டு விளையாட்டு விழாவானது நடைபெற்றதை தொடர்ந்து இந்த விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். ஜெ.ராஜாங்கம் தலைமை வகித்தார்.
மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைபந்து அணியின் பிசியோதெரபிஸ்ட் டாக்டர்.சிவசண்முகசிங் பங்கேற்றார் .மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர் பாக்கியவதி வரவேற்புரை அளித்தார். இதனை தொடர்ந்து விளையாட்டு மன்ற செயலாளர் தினேஷ்குமார் ஆண்டு அறிக்கை வாசித்தார்..
விளையாட்டு மன்ற துணைச்செயலர் ரம்யா உறுதிமொழி ஏற்றார். இந்த விழா நிகழ்ச்சி இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி உதவி ஆசிரியர் சதீஷ் பாபு, மற்றும் முனைவர். பாரதபிரியா அவர்கள் செய்திருந்தனர்.