தேனி மாவட்டம் கோம்பை- தேவாரம் செல்லும் சாலையில் உள்ள கோம்பை நாடார் உறவின்முறை மக்கள் மன்றம் அருகே சாலையில் மண் குவித்து வைத்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. .
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதி வழியாக செல்வதால் சாலையில் கொட்டி வைத்திருக்கும் மண்ணால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.பெரிதாக கருதப்படும்.
இந்த சாலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது கேலிக்கூத்தாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.மேலும்,சாலையில் மண் குவிந்து இருப்பதால் வாகன ஒட்டிகள் செல்லும்போது மண்ணானது காற்றில் பறப்பதால் வாகன ஒட்டிகள் நிலை சீர்குலைகின்றனர்.
விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.