கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் குமார் தலைமையில் குருசடி புனித அந்தோனியார் கருணை குழந்தைகள் காப்பக ஆதரவற்றோர் இல்லத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ மகேஷ் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினார்..
நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான . ஹெலன் டேவிட்சன், இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் தில்லை செல்வம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநில துணை செயலாளர் சிவராஜ், ஒன்றிய செயலாளர் .பிஎஸ்பிசந்திரா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சிடி சுரேஷ் மாணவரணி சதாசிவம் மாநகர மண்டல தலைவர் ஜவகர் மற்றும் மாநகர துணை மேயர் மேரி பிரின்சி லதா பகுதி செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.