பிரான்ஸ் நாட்டின் Bastille Day தேசிய விழாவில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக, இந்திய பிரதமர் மோடி அவர்கள் நேற்று ஜூலை 14 அன்று சென்றடைந்தார். அது சமயம், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த நாட்டுடன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவை பாராட்டி வருவதுடன், சிவில், அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் தங்கள் கூட்டாண்மையை பலப்படுத்தி வருகின்றன.
இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக, இந்தியாவும் பிரான்சும் சக ஆண்டுகளில் ஆற்றல் மற்றும் இணைய பயங்கரவாதத்தை எதிர்த்தல் போன்றவற்றில் வலுவான பங்காளிகளாக இணைந்துள்ளனர். இந்த உறவு பல ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் வரலாற்று உறவு ஆகும். இந்த உறவு முன்பெல்லாம் வியாபார ரீதியாக மட்டுமே இருந்தது, ஆனால் தற்பொழுது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பரிமாணத்தை வலுப்படுத்த முயற்சி மேற்க்கொண்டுள்ளது.
இந்த உறவின் மூலம் இந்தோ-பசிபிக் பகுதியில், பாரிசுக்கும் புது டெல்லிக்கும் இடையே கடற்படை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மேலும் பிரான்சு தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் வேளையில், இந்த உறவு முக்கிய கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது.
இந்திய பிரதமரின், பிரான்ஸ் பயணம் கீழ்கண்ட திட்டங்களை ஆக்கபூர்வமாக முடிவெடுக்க உதவியாக இருந்தது.
இந்டோ-பசிபிக் பகுதியில், இந்தியா பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான திட்டம் வகுத்தல்.
பிரெஞ்சு கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இந்தியர்களுக்கு ஐந்தாண்டு செல்லுபடி ஆகும் குறுகிய கால ஷெங்கண் விசா வழங்குதல்.
இந்தியா வாங்கி இருந்த 36 ரபேல் போர் விமானங்களை டெலிவரி செய்தல் சம்பந்தமாகவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்தியாவும் பிரான்சும் வானூர்தி தொழில்நுட்பங்களில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவும் பிரான்ஸும் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் தங்கள் ஒத்துழைப்பை தீவிர படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
ஆற்றல் மிகு பாதுகாப்பை உறுதிப்படுத்தி அதன்மூலம் காலநிலை விலக்குகளை வென்றெடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தை இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் சூழலியல் மாற்றங்கள் மூலம், இரு சமூக சேர்க்கைக்கு ஆதரவு சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது.
பிரான்ஸ் ஜனாதிபதி அந்த நாட்டின் மிகச்சிறந்த விருதான GRAND CROSS OF THE LEGION HONOUR-ஐ இந்திய பிரதமர் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். அந்த விருதினை இந்தியாவில் வாழும் 114 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாக இந்திய பிரதமர் கூறினார்.
இந்தியாவின் 269 பேர் கொண்ட முப்படை வீரர்கள் பிரெஞ்சு தேசிய தினம் நிகழ்வில் பங்கேற்று அணிவகுப்பை சிறப்பாக நடத்திக் காட்டினர். இந்த அணிவகுப்பிற்கு இந்திய பிரதமர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி தங்களது முறையான வணக்கத்தை தெரிவித்தனர். இது பிரெஞ்சு மக்களிடையே பெரும் வியக்கத்தக்க மனநிலையை உருவாக்கியது.
அதன் பிறகு பிரான்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்தியப் பிரதமர் உரையாற் றினார். அப்போது அவர் பிரான்சில் திருவள்ளுவர் சிலையை இந்தியா அமைக்கும் என்று கூறினார். இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.