நாகர்கோவில் மாநகராட்சியில் ₹67 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியின் தெருக்கள் பிரதான சாலைகள் நீண்டக்காலமாக சிதலமடைந்து போக்குவரத்துக்கு பயன் அற்ற நிலையில் இருந்தது. இன்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வெற்றியில் திமுக சார்பில் வழக்கறிஞர் மகேஷ் வெற்றி பெற்று மேயர் ஆனார். முதல் காட்டமாக அனைத்து வார்டு பகுதிகளிலும்ஆய்வுமேற்கொண்டார் பின்னர் முதல்கட்டமாக சாலைகளை சீரமைத்து வருகிறார். இதுவரை 100 கோடிக்கு மேல் திட்ட பணிகள் முடிந்து விட்டன.
இன்நிலையில் இன்று (19)
36-வது வார்டுக்குட்பட்ட டிவிடி காலனி பகுதியில் ₹35 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை துணை மேயர் மேரிபிரின்சிலதா , கவுண்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து
38-வது வார்டுக்குட்பட்ட குளாளர் தெரு, வாகையடி வடக்கு தெரு ஆகிய பகுதிகளில் ₹21 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை துணை மேயர் மேரி பிரின்சி லதா மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி கவுண்சிலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
பின்னர்
24-வது வார்டுக்குட்பட்ட திலகர் தெருவில் ₹11 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை துணை மேயர் மேரி பிரின்சி லதா மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி கவுண்சிலர் ரோசிட்டா திருமால் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
நிகழ்வில், மண்டல தலைவர் ஜவகர்,, மாமன்ற உறுப்பினர்கள் , சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகபெருமாள், பகுதி செயலாளர்கள் சேக் மீரான், மாநகர துணை செயலாளர் ராஜன், வட்ட செயலாளர்கள் முருகன், பாலசுப்பிரமணியம் பாலா அன்பு ஜோணி ராஜன் அலெக்ஸ் நாகு ராஜேஷ் சுந்தர் முருகன் ஆகியோர் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.