ராம் சார் அங்கீகாரம் பெற்ற வேம்பனூர் குளம் இரவு நேர பார்-ஆக மாறி விட்டதால்அப்பகுதி . பொதுமக்கள் குளம் அருகே செல்லவே அச்சப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசாரிப்பள்ளம் அடுத்த பெரும் செல்வவிளை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது வேம்பனூர் குளம் . இந்த பகுதி நாகர்கோவில் மற்றும் பெருஞ்செல்வவிளை உள்ளிட்ட கிராம பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை பகுதி ஆகும்.
வேம்பனூர் குளம் தற்போது ராம்சார் குறியீடு பெற்றுள்ளது. இரவு நேரங்களில் இந்தக் குளத்துசாலை ஓரங்களில் பலரும் மது அருந்தி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர் சில நேரங்களில் வழிப்பறியும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
வேம்பனூர் குளம் பகுதி .
ஆசாரிப்பள்ளம், ராஜாக்கமங்கலம், இரணியல் ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாகும் இருந்தும் இரவு நேரங்களில் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து வருவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
அந்தக் காவல் நிலையம் பார்த்துக் கொள்ளும் என இவர்களும் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என அவர்களும் கடைசியில் யாரும் வருவதில்லை என்பது வேடிக்கை.
ஆசாரி பள்ளத்திலிருந்து இந்த வழியாக பெரும் செல்வவிளை, ஆளுர் , வீராணி, பேயன்குழி, பரசேரி போன்ற பகுதிகளுக்கு இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல பயந்து ஆசாரிப்பள்ளம், பாம்பன் விளை, தோப்பூர் போன்ற பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர்.
மற்றும் குளத்தில் அருகில் இருந்து மது அருந்திவிட்டு அந்த மது பாட்டில்களை எதிரே உள்ள வயல்களில் போடுவதால் பாட்டில் துண்டுகள் விவசாயிகளின் கால்களை பதம் பார்த்து வருகின்றது.
இந்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் காவலர் வராததுதான் காரணம் காவலர்கள் ரோந்து சென்றால் பொதுமக்கள் தைரியமாக செல்வார்கள் இப்பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் என்கின்றனர் பொதுமக்கள் காவல்துறை இனியாவது விழித்துகொள்ளட்டும்.....