கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த அ.பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் 2016 முதல் 2023 வரை 5ஆண்டுகளாக தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் பெற்றுள்ளது.
இப்பெருமை பெற்ற இப்பள்ளியில் சுற்று சுவர் இல்லாத அவல நிலை, பள்ளி அருகில் காட்டு பகுதி என்பதால் பள்ளிக்கு சுற்று சுவர் ,பேருந்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருமாறு தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.