சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் புற்றுநோய் உருவாக்கம் செல்களை அறுவை சிகிச்சை இன்றி அழிக்கும் வகையில் "ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி" கருவியின் செயல்பாட்டை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
இந்நிகழ்ச்சியில் குளோபல் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலேக் குள்ளர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்,
இந்த அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்