புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் சட்டமன்ற தொகுதி கல் மண்டபத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை கௌரி தலைமை வகித்து சமுதாய நலப்பணித்திட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்.
மாநில சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார் புதுமைப் பாலகிருஷ்ணன் மின்சார வாகனங்களின் நன்மைகளை விளக்கி கூறினார். அரசு சுற்றுப்புற சூழல் அலுவலர்கள் நித்யா, தேன்மொழி, ஜெயபாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் மாணவர்கள் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர் திட்ட அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.