தமிழ்நாடு அரசு இந்து அறநிலை துறையின் புதிய அறங்காவலர் குழு பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் வடிவீசுவரத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் வைத்து உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில் நடைபெற்றது .
அறங்காவலர் குழு தலைவராக பிடி ராஜன் பொறுப்பேற்றார் .உடன் அற ங்காவலர் குழு உறுப்பினர்களாக சத்குரு கண்ணன், மீனாட்சி, சைன்குமார், மாதவன்நாயர் ஆகியோர்களும் பதவி ஏற்றனர்.
நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மேயருமான மகேஷ் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் குமரி மேற்கு மாவட்ட திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் ரிமோன் மனோ தங்கராஜ் ஒன்றிய செயலாளர்கள் பி எஸ் பி சந்திரா பாபு கோபால் வக்கீல் ராஜேஷ்குமார் மாஸ்டர் மோகன் அருளானந்தம் ஜார்ஜ் லிவிங்ஸ்டன் மற்றும் தாமரைபாரதி பிரவீன் குமார் பப்புசன் ஞானசேகர் ராஜேஷ்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .