தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணை இல்லத்தில் உணவு வழங்குவதென கலை இலக்கியபேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குமரி கிழக்கு மாவட்ட கலைஇலக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் சசிகுமார் , மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு மாவட்ட கழக செயலாளரும் மாநகர மேயருமான மகேஷ், மாநில கலை இலக்கிய பேரவை செயலாளர் தில்லை செல்வம் மாநில துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக முதல் நிகழ்ச்சியாக புனித அந்தோணியார் கருணை இல்லத்தில் வைத்து ஏழைகளுக்கு உணவு வழங்குவதென்றும், தங்களை கலை இலக்கிய பேரவை நிர்வாகிகளாக நியமனம் செய்த தமிழக முதலமைச்சர் தளபதி முகஸ்டாலினுக்கும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகர மேயருமான மகேஷ் க்கும் நன்றி தெரிவித்தும் கலை இலக்கிய பேரவை சார்பில் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதென்றும் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் முகஸ்டாலின் சுட்டிகாட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார் மாநகர செயலாளர் ஆனந்த் துணை அமைப்பாளர்கள் தினேஷ் அரிகிருஷ்ணபெருமாள் குமாரசாமி இராஜேந்திரன் கி₹ருஷ்ணன் விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்மணோகர் இலக்கிய அணி துணை அமைப்பாளர் சாம்ராஜ் பேரூர் செயலாளர்கள் பிரபாஎழில் மாதவன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.