நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாடுகாணி பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது பழைய கான்கிரீட் சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய சாலையானது போடப்படுகிறது.
Jcb எந்திரம் மூலம் சாலையானது பெயர்க்கப்படும் போது அந்தப் பகுதியில் உள்ள பாலகுமார் என்பவரின் வீட்டின் முன்புறம் மண் சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு மதில் சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறினோம்.
அவர்கள் அதற்கு இப்போது நிதி ஆதாரமில்லை ஒரு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள் பின்பு இப்பணியை மேற்கொள்கிறோம் என்றார்கள் இப்போது மழைக்காலம் என்பதால் மண்ணானது அரிப்பு ஏற்பட்டு நாளுக்கு நாள் மண்சரிவு ஏற்பட்டு வீடு இடியும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மதில் சுவர் பணியை செய்து அந்த வீடு இடியாமல் இருக்க அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் .
நீலகிரி மாவட்ட செய்தியாளர்
Dr.G.ரஜினிகாந்த்