இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் தேனி மாவட்டம் முழுவதும் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் ஏராளமாக காணப்பட்டது.மேலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டதன் தொடர்சியாக பெண்கள் சாமி ஆடினர்.