நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக இப்போதே நாம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமென திமுக இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகர மேயருமான ரெ.மகேஷ் ஆலோசனை வழங்கி பேசினார்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதைப்போல் மாநகர இளைஞரணி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர் இவர்களுக்கான அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது நிகழ்வுக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயருமான மகேஷ் தலைமை வைத்தார் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் என அகஸ்தீசன் முன்னிலை வகித்தார்.
துணை அமைப்பாளர்கள் பிரிட்டோ சேம், விஜய் ,பொன் ஜான்சன் ,பிரபு, சரவணன் ஆகியோரும் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சிடி சுரேஷ் துணை அமைப்பாளர்கள் கராத்தே ராஜேஷ் ,முத்துக்குமார், விசாக் மோகன், அருள்செல்வின், அபிலாஷ் ,மோகன்ராஜ், அகமத்ஷா மற்றும் மாவட்ட அவைத் தலைவர் எப்எம் ராஜரத்தினம் மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம் மாவட்ட துணை செயலாளர்கள் பூதலிங்கம் சோமு மாவட்ட பொருளாளர் கேட்சன் மாநகரச் செயலாளர் வக்கீல் ஆனந்த் அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பாபு , மதியழகன் தோவாளை ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிராங்கிளின் மற்றும் கழகத்தினர் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் மேயர் மகேஷ் பேசும் போது.
திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிக்கு தான் முக்கியத்துவம் அதிகம் நானும் இதே பதவியில் இருந்து தான் இன்று மாவட்ட செயலாளராக இருக்கிறேன் கிடைத்த பதவியை பொறுப்புடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் நாகர்கோவில் நடந்த பாஜக கூட்டத்தில் திமுகவைப் பற்றி அண்ணாமலை மிக தவறாக விமர்சித்து பேசியிருக்கிறார் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெருத்தெருவாக வாகனத்தை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் ராகுல் காந்தியை தேர்தலில் இருக்க முடியாமல் பாஜக செய்துவிட்டது இதிலிருந்து அவர்களுக்கு பயம் வந்து விட்டது என்று தெரிகிறது 2024 தேர்தல் வருகிறது என்றாலும் நாம் இப்போதே பணிகளை தொடங்கி விட வேண்டும் .
திமுக சார்பில் அல்லது கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அவர் பாஜக வேட்பாளர்களை விட கூடுதல் வாக்குகள் பெறுகின்ற வகையில் நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும் குறிப்பாக நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் ராஜாக்கமங்கலம் ஒன்றியங்களில் திமுக. சார்பு வேட்பாளர் அதிக வாக்குகள் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டு பேசினார்