முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக தொமுச சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ மகேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் . நிகழ்வில் போக்குவரத்துகழக முதன்மை அதிகாரி மலர்விழி கிளை அதிகாரிகள் ராஜராஜன் திருநாவுகரசு கண்ணன் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் திருமலைகுமார் நந்தினி தொமுச நிர்வாகிகள் கழக தொ.மு.ச.செயலாளர் சிதம்பரம் அந்தோணி பகவதிகண்ணு ஆறுமுகம் ரிச்சாடு மாநகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.