நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுகுமார் அவர்களிடம் சங்ககிரி மேற்குப் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர்.
அந்த மனுவில் பள்ளிபாளையம் படைவீடு பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்காக 40-ஆண்டுகளாக,சிமெண்ட்ஸ் லோடு ஓட்டி வருகிறோம்... இந்நிலையில் கடந்த சில காலங்களாக எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிமெண்ட் லோடு மற்றும் வாடகை உள்ளிட்ட பிற சலுகைகள் தற்போது வழங்கப்படவில்லை... இதனால் லாரி உரிமையாளர்கள் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
ஆகவே கடந்த காலங்களைப் போல இந்தியா சிமெண்ட் நிர்வாகம் சிமெண்ட் லோடு பணிகளை வழங்க வேண்டும். இந்த தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஆவணம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது......
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ,வருவாய் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்