தேனி மாவட்டம் : உத்தமபாளையம் முல்லைபெரியாற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உடல் மீட்பு!!!
10/24/2023
0
உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவரின் உடல் முல்லைப்பெரியாற்றில் கைப்பற்றப்பட்டது. கோவிந்தன்பட்டியை சேர்ந்த செல்வம் இவரது மகனான மார்ட்டின் என்பவர் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இதனை தொடர்ந்து விடுமுறை தினமான நேற்று உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக மார்ட்டின் சென்றார்.தொடர்ந்து,மார்ட்டின் தவறி ஆற்றில் விழுந்துவிட்டார். செய்வதறியாது திகைத்த நண்பர்கள் ஆற்றில் விழுந்த மார்ட்டின் என்பவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து உத்தமபாளையம் தீயணைப்பு துறையினர் மாணவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தண்ணீரின் அளவு அதிகமாக காணப்பட்டதாலும், மற்றும் இரவு நேரமானதாலும் தேடுதல் பணியை நிறுத்தினர். இன்று மாணவரின் உடலை தேடும் பணி நடைபெற்றதை தொடர்ந்து மாணவரின் உடலை தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர்.மேலும், தீயணைப்பு துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றியதோடு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
