திருப்பூர் மாவட்ட : இயற்கை மரணம் அடைந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது!!

sen reporter
0


 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான  நலவாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் எம் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றிய பொழுது இயற்கை மரணம் அடைந்தவரின் வாரிசுதாரருக்கு தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் இயற்கை மரண உதவித் தொகையை வழங்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா கிறிஸ்துராஜ் இ.ஆ. ப., மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு இ.கா.ப, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு‌. சாமிநாதன் இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top