சேலம் மாவட்டம்: சங்ககிரி அருகே இளம்பட்டதாரி பெண் உடல் கருகி பலி போலீசார் விசாரணை !!

sen reporter
0


 சின்னாக்கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் கருவறையான் காட்டைச் சேர்ந்தவர் சீனிவாசன் விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபு (27) என்ற மகனும், வனிதா (23) என்ற மகளும் உள்ளனர். வனிதா பிகாம் பட்டப்படிப்பை முடித்து விட்டு இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் 25ந் தேதி மாலை  4:30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் வனிதா உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் சத்தமிட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். சமையலறையில் கேஸ் சிலிண்டர் இருந்ததால் யாரும் உள்ளே செல்லவில்லை. இது குறித்து சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்ஐ உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர் 

அருள்மணி மற்றும் மீட்பு படையினர் சமையல் அறையில் தண்ணீர் அடித்து கருகிய நிலையில் இருந்த வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து வனிதா சமையலறையில் சமைத்தபோது கேஸ் கசிவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். சங்ககிரி அருகே இளம்பட்டதாரி பெண் சமையல் அறையில் கருகிய நிலையில் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top