எடப்பாடியுடன் மீண்டும் சேர தூது விட்டதாக கூறப்படுவது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய் எனவும் அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் எனவும் ஈரோட்டில் ஓபிஎஸ் கூறினார்.
ஈரோடு மாநகர் மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதி கழகச் செயலாளர் பிரபாகரன் திருமண வரவேற்பு விழா ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
பின்னர் அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
நீதிமன்றத்தில் அதிமுக கட்சி சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை எதிர்த்து மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்-க்கு மேல் முறையீடு முடிவு நீதியரசர்கள் கையில் உள்ளது எனக்கு ஜோதிடம் தெரியாது என்று முன்னமே கூற நீதிபதிகள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக...
திமுக ஆட்சியில் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை அது குறித்து எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தினசரி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறோம்.
எடப்பாடியின் வடிகட்டிய பொய்:
எடப்பாடியுடன் மீண்டும் சேர தூது விட்டதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை... இல்லை... அது முற்றிலும் தவறான தகவல் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை.
நான் எடப்பாடிக்கு தூது விட்டதாக கூறுவது ஜமுக்காளத்தில்
வடிகட்டிய பொய் தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி?
பாஜகவுடன் கூட்டணி குறித்து கேள்விக்கு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருப்போம். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் இதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவு இல்லாமல் எடப்பாடியால் வெற்றி பெற முடியாது.
சசிகலா தான் அறிவிக்க வேண்டும்:
நானும் டிடிவி தினகரனும் தற்போது இணைந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறோம் எங்களுடன் இணைவது குறித்து சின்னம்மா தான் அறிவிக்க வேண்டும் அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு சட்டமன்ற கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எங்களை சந்தித்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டதால் ஆதரவு தந்து நானும் டிடிவி தினகரனும் வாபஸ் வாங்கினோம் இரட்டை இலை சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எடப்பாடி நிலை ஈரோட்டிலேயேதெரியும்:
ஆனால் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிச்சாமி தோற்கடிக்கப்பட்டார்... என்றால் நீங்களே அவர்களின் நிலை என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள் ஈரோட்டில் 1989 புரட்சித்தலைவி அம்மா சேவல் சின்னத்தில் தனியாக தேர்தலில் நின்ற போது 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற மாவட்டம் ஈரோடு மாவட்டம் அவ்வளவுதான் என்று கூறினார்.
.jpg)