திருச்செந்தூர் : செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு!!

sen reporter
0


 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். 


நாளை சனிக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார விழாவிற்காக கடற்கரையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இந்த சூரசம்ஹார விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், இரவு நேரங்களில் தங்கும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கூடாரங்கள், சமையல் ஏற்பாடுகள், அன்னதான கூடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.


 பக்தர்களின் கோரிகைகளை கேட்டு அறிந்து சிறிது நேரம் உரையாற்றினார் 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில் கந்தசஷ்டி விழா கோலாகாலமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த வருட கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. 


 இவ்விழா காலங்களில் ஒவ்வொரு நாளும் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விரதங்கள் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top