தேனி மாவட்டம்: உத்தமபாளையம் கிளை நூலகத்தில் நடைபெற்ற நூலக வார விழா!!!
11/18/2023
0
56வது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு உத்தமபாளையம் கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டமும் அன்றில் இலக்கிய சுற்றமும் இணைந்து நூலக வாரவிழாவை நடத்தினர். இந்த நிகழ்வானது தேனி மாவட்ட நூலக அலுவலர் கோகிலா வாணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்வில் வரவேற்புரையாக நூலகர் சுபாதேவி அவர்களும், கிராம நிர்வாக அலுவலர் கவிதா, முனைவர் முகமது ரபீக்,மற்றும் வழக்கறிஞர் சந்திய மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து வாழ்த்துரையாக ஆசிரியர்கள் ராகவன், முத்துக்குமார் அவர்களும் சிறப்புரையாக கவிஞர் பாரதன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்வு தரும் நூல்கள் எனும் தலைப்பில் உரையாற்றினர். இதனை தொடர்ந்து பேச்சாளரான காயத்ரி வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த விழாவின் முன்னாள் வாசகர் வட்டத்தலைவர் பீர்முகமது அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விழாவை தொடங்கினர். நன்றியுரையானது நூலகர் ராஜ்குமார் அவர்களால் தெரிவிக்கப்பட்ட இந்த விழாவில் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
