நேற்று 15. 11. 23 மாலை 2.30pm மணி அளவில் வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஏ திருமுருகன் மற்றும் SSI முருகன் மற்றும் ரமேஷ் ஆகிய போலீஸ் குழு வடசேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வடசேரி ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது திருநெல்வேலி டு திருவனந்தபுரம் தேசிய
நெடுஞ்சாலையில் கிழக்கில் இருந்து மேற்காக சந்தேகத்திற்கு இடமாக வந்த DL 4C ND 9852 என்ற பதிவெண் கொண்ட ஹூண்டாய் காரை நிறுத்தி தணிக்கை செய்த போது மேற்படி காரில் பின் இருக்கையில் இருந்த பிரவுன் நிற தோல் பையில் திமிங்கலம் உமிழ் நீர் இருப்பது தெரியவந்து காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் வயது 53, வேலாயுதம் வயது 47, சுந்தர் வயது 25 மற்றும் நாராயணன் வயது 41 ஆகியோரை விசாரணை செய்து திமிங்கல உமிழ்நீர் கைப்பற்றி மாலை மாவட்ட வன அலுவலர் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்பு மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி மேற்படி நான்கு கைதிகள் மற்றும் அவர் பயன்படுத்திய கார் மற்றும் திமிங்கல உமிழ்நீர் 10 கிலோ எடை கொண்ட உமிழ் நீரை மாவட்ட வன அலுவலகத்திற்கு மாலை எடுத்து வரப்பட்டு மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி இன்று அவர்களை நீதி மன்றத்தில் கைது நடவடிக்காக ஆஜர் படுத்தப்படுகிறது
