கன்னியாகுமரி மாவட்டம் காமராஜர் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர் 31 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் குடும்பத்தினருடன் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதில் அவர்கள் கூறியதாவது; 31 ஆண்டுகளுக்கு பின் அனைவரையும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கடந்த கல்லூரி காலங்கள் தங்கள் நினைவில் வந்து செல்கின்றன என்றும் கூறினார்.
இது மட்டுமல்லாமல் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தோம் அனைவரையும் ஒருங்கிணைத்த முன்னாள் மாணவர் ஷேக் அதற்கான வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்ததனால் தங்கள் வேலைகளையும் பொருட்படுத்தாது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அனைவரும் வெவ்வேறு மாவட்டங்கள் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து இந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.