வேட்டவலம் இலொயோலா கல்லூரியில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பாரதமொழிகளின் திருவிழா மற்றும் பாரதியார் பிறந்தநாள் விழா, மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
விழாவிற்கு அதிபர் தந்தை சி.மரியநாதன், சே.ச. அவர்கள் ஆசியுரையுடன், செயலர் தந்தை முனைவர் ஆ.இன்னாசி, சே.ச. அவர்கள் வாழ்த்துரை வழங்க, முதல்வர் தந்தை முனைவர் சி.பேசில்சேவியர்,
சே.ச.அவர்கள் தலைமை தாங்கினார்.
முனைவர் நா.பிரபு வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய மன்றத்தலைவர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
இளங்கலை தமிழ், இரண்டாமாண்டு மாணவர் ஆ.அருள்பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.
பேச்சுப் போட்டியின் நடுவர்களாக முனைவர் ச.பார்த்திபன், முதுகலை தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அண்டம்பள்ளம், திருமதி அ.ஐவி, முதுகலை
தமிழ்ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம், திரு அ.டேவிட், பட்டதாரி ஆசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியினை இ.கோகுல் மற்றும் ஜா.நிஷ்சோனா தொகுத்து வழங்கினர்.
முதல் பரிசினை (ரூ.5000/-)
த.தோமினிக் சாவியோ, இரண்டாம் பரிசினை (ரூ.3000/-) ப.யோகேஸ்வரி, மூன்றாம் பரிசினை (ரூ2000/-)ஜா.அந்தோணி பிரசாந்த் ஆகியோர் பெற்றனர். வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு அருள் தந்தையர்கள் பாராட்டுச் சான்றிதழும், பரிசு தொகையினையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
விழாவில் துணைமுதல்வர் பேரா.கேத்ரின் லௌரா தமிழ்த்துறை தலைவர் ஆ.ஆரோக்கியதாஸ் ஆகியோர் உள்ளிட்ட பிற துறை தலைவர்கள், தமிழ் துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.