இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99வது அமைப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் 11இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த கொடியேற்றும் நிகழ்வானது உத்தமபாளையம் ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் வீ.பாண்டி அவர்கள் தலைமையில் நடந்தது.
மேலும், இந்த நிகழ்வில் ஒன்றிய துணைசெயலாளர்கள் தோழர் ராஜேந்திரன், முத்துலட்சுமி, ஒன்றிய பொருளாளர் தோழர் சூசை அவர்கள் முன்னிலையில் நடந்தது.
இந்த நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.