சென்னையில் அருகருகே உள்ள புழல் ஏரி, மற்றும் அராபத் ஏரிகளை காப்பாற்றுவதற்காக அப்பகுதி நண்பர்களுடன் இணைந்து பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார் சமுக ஆர்வலர்.
அராபத் ஏரியில் சாக்கடைகள் எங்கெல்லாம் கலக்கின்றன என்பதை நேரில் காண்பித்தார்.
புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எழுந்துள்ள ஆக்கிரமிப்புகளை சுட்டிக் காட்டினார்.
தங்கள் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கும் போதிலும் அதை பொருட்படுத்தாமல் ஒட்டு மொத்த சென்னை மக்கள் நலனுக்காக உழைத்து வருகிறார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏரிக்கருகே திரண்டு,நேர்மையான அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும் ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார்கள்.