கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில் அருகே உள்ள ஊட்டுவாழ் மடம் பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு.
இலங்கை அருகே நீடிக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள் இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடாமல் மழை பெய்து கொண்டு வருகிறது.
இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்நிலையில்
நாகர்கோவில் அருகே உள்ள ஊட்டுவாழ் மடம் பாறைக்கால் பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. இந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு.