திருவண்ணாமலை மாவட்டம்: செங்கம் அருகே உள்ள கிருஷ்ணர் ஆலய மண்டல பூஜை விழா! 1008 பால்குடம் எடுத்து வழிபாடு!!

sen reporter
0


 திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தையடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில்  அமைக்கப்பட்ட கிருஷ்ணர் ஆலயத்திற்க்கு

கடந்த வருடம் தை மாதத்தில் அஷ்டபந்தனை  ஜீரோதாரண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மண்டல பூஜையில்,  அக்னிகுண்டம் அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் எடுத்து வந்து மூலவரான கிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.


மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து கருவரையில் அமைந்துள்ள கிருஷ்ண பகவானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை செய்தனர்.


இந்த மண்டல பூஜை விழாவில் நாச்சிப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top