தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் பாரத் ரத்னா எம்ஜிஆரின் 107 வது பிறந்த தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
விளாத்திகுளம் யூனியன்சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையில் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ என்.கே. பெருமாள்,
ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகர செயலாளர் மாரிமுத்து, மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
