திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவலங்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பயனூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரசு மதுபான கடை.
மதுபான கடையில் மது பிரியர்கள் மது வாங்கிக் கொண்டு அருகில் ஜாகிரிமங்கலம் கிராமம் செல்லும் வழியில் உட்கார்ந்து மது அருந்து கொண்டிருந்த மது பிரியர்களை கொத்தாக அதிரடி படையினர் விரட்டி விரட்டி பிடித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகெர்லா ஜெபஸ் கல்யாண் இ.கா.ப தலைமையில் நடந்த வேட்டையில் 7 வாகனங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை அதிரடிப்படை வாகனத்தில் திருவலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதிரடி படை வீரர்கள் மற்றும் திருவலங்காடு காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் அவர்கள் உடன் இருந்தனர்.
சம்பவத்தை குறித்து அப்பகுதியினர் கூறும் போது பலமுறை நாங்கள் இந்த அரசு மதுபான கடை மூட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பலமுறை கடிதம் அளித்தோம்.
எந்த நடவடிக்கையும் இல்லை, தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
வழியில் இந்த மது அருந்தும் நபர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தோம் என கூறினர்
.jpg)