ரஷ்யா: ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது!? உக்ரைன் இராணுவத்தினர் 65 பேர் உள்ளிட்ட 74 பேர் பலி!

sen reporter
0


 விபத்துக்குள்ளான ரஷ்ய இராணுவ விமானத்திலுள்ள உக்ரைன் இராணுவத்தினர் 65 பேர் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Belgorod நகரின் மாகாணா ஆளுநர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.


ரஷ்யாவின் Belgorod எனும் பகுதியில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியது.


குறித்த விமானத்தில் 65 பேர் உக்ரேனிய படை வீரர்கள் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கைதிகள் பரிமாற்றத்திற்காக அவர்கள் Belgorod பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமானத்தில் மேலதிகமாக ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று உதவியாளர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ரஷ்ய விமானப் படைக்கு சொந்தமான IL-76 என்ற விமானம் ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.


இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top