தேனி மாவட்டம்: கவிஞர் ஷர்ஜிலா பர்வீன்யாகூப் அவர்களின் சரக்கொன்றை நிழற்சாலை நூல் வெளியிட்டு விழா!! கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவையும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்தியது!!

sen reporter
0


 தேனி மாவட்டம் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து கவிஞர் ஷர்ஜிலா பர்வீன்யாகூப் அவர்களின் சரக்கொன்றை நிழற்சாலை நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. 


இந்த வெளியிட்டு விழாவானது புரவலர் தி.பொ.சுருளிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக எம்.கே.எஸ்.சந்திரசேகர், பொன்.காட்சிக்கண்ணன்,

அ.அலீம் வின்னர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும்,கோ. பாண்டியன் கலைச்செல்வி குழுவினர் மொ.மணிமுருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினர். தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ம. முகமது அலிஜின்னா அவர்கள் நூலை வெளியிட கனரா வங்கியின் முன்னாள் மேலாளர் அய்யாத்துரை, மற்றும் விஸ்வநாதன் அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டனர். 



கவிஞர் சோமநாத பாரதி நூல் மதிப்புரையாற்றினார். மேலும், ஆசிரியர் மு. நிஜாம்தீன், காயத்ரி சோ.பஞ்சுராஜா, கற்பூரபூபதி வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, இவர்களுடன் நூலக வாசகர் வட்டம் உறுப்பினர்கள் பா.த.இ. பேரவை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top