வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் சார் பதிவாளர் கவிதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் தாலுகா, சக்தி மாரியம்மன் கோயில் தெரு, பழைய அருந்ததியர் காலனி, கீழ்கவசம் பட்டு, கே.வி. குப்பத்தைச் சேர்ந்தவர் கீதா.
இவரது கணவர் ரமேஷ். இவர்கள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
கீதா -ரமேஷ் தம்பதியர் கொடுத்த புகார் மனு விசாரணைக்காக குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் கே. வி. குப்பம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.
அதில் கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்தவும் வழக்குப் பதிவு செய்யவும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் பேரில் கே. வி. குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் கே.வி. குப்பம் சார் பதிவாளர் கவிதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
