கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பாதிரியார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற அரசு போக்குவரத்து துறை ஊழியர் அயண்பாக்சால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாதிரியார் உட்பட கொலையாளிகள் தப்பியோட்டாம்.
கொலையாளிகளை கைது செய்ய கோரி சடலத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் இரணியல் போலீசார் பேச்சுவார்த்தை.
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்தவர் சேவியர்குமார், இவருக்கு ஒரு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கும் மைலோடு புனித மிக்கேல் ஆலய பங்கு நிர்வாகிகளுக்குமிடையே வாட்ஸ் ஆப் குழுவில் ஏற்பட்ட கருத்து மோதல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று மதியம் சேவியர் குமாரை பேச்சுவார்த்தைக்காக மைலோடு தேவாலய வளாகத்தில் உள்ள பாதிரியார் அலுவலத்திற்கு பங்கு நிர்வாகிகள் அழைத்துள்ளனர்
அப்போது பாதிரியார் ராபின்சன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் பங்கு நிர்வாகிகள் சேர்ந்து சேவியர் குமாரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலின் போது பாதிரியார் அலுவலகத்தில் இருந்த அயண் பாக்ஸ் மற்றும் பூச்சட்டியால் சிலர் அவரை தலையில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற போது அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலய வளாகத்தில் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் சடலத்தை எடுக்க கூடாது என கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

