ஈரோடு மாவட்டம் போதையில் டவரில் ஏறிய வாலிபரால் பரபரப்பு!!!
1/19/2024
0
ஈரோட்டில் ரயில்வே ஜங்ஷன் லைட் டவரில் மதுபோதையில் ஒருவர் ஏறிவிட்டதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து உடனே விரைந்து சென்ற ரயில்வே போலீசார் மது போதையில் உள்ள நபரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.நீண்ட நேரம் ஆகியும் மதுபோதையில் இருந்த நபர் இறங்காததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவரில் ஏறிய நபரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
